மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> த்‌ரிஷா விஷால் ஜோடி ?

அவன் இவன் தவிர்த்து விஷாலின் அனேகமாக எல்லாப் படங்களிலும் முதல் சா‌ய்ஸ்சாக த்‌ரிஷாவே இருந்திருக்கிறார். இருவரும் காதலிப்பதாகக்கூட வதந்தி வந்திருக்கிறது. ஆனால் விஷாலுடன் ஜோடி சேர த்‌ரிஷா இதுவரை மனது வைத்ததில்லை.

இறுதியாக தனது தளராத முயற்சியில் விஷால் வெற்றி பெற்றிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

வெடி படத்தில் நடித்து வரும் விஷால் அடுத்து திரு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். திரு தீராத விளையாட்டு பிள்ளை படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் கதையை சொல்லி த்‌ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். அவரும் ஓகே சொன்னதாக‌த் தெ‌ரிவிக்கிறார்கள்.

தமிழில் ஒரு படம் நடிக்கிறேன். யார் ஹீரோ என்பதை இயக்குனரே தெ‌ரிவிப்பார் என்று த்‌ரிஷா சொல்லி வருகிறார். இதுதானா அந்தப் படமும், இயக்குனரும்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.