கடந்த பல தீபாவளிகள் ரசிகர்களை காயவிட்டன. மாறாக இந்த தீபாவளி களைகட்டியிருக்கிறது.
ரஜினி, கமல் படங்கள் இந்தமுறை இல்லை என்றாலும் முன்னணி நடிகர்கள் நால்வரின் படங்கள் வெளியாகின்றன.
விஜய்யின் வேலாயுதம் அக்டோபர் 25 வெளியாகும் என்பதை ஐங்கரன் உறுதி செய்துள்ளது. அதேபோல் சூர்யாவின் 7 ஆம் அறிவும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கியிருக்கும் மயக்கம் என்ன படமும் தீபாவளிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த மூன்று படங்களுடன் சிம்புவின் ஒஸ்தியும் போட்டியில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒஸ்தியின் முடிவு மட்டும் கடைசி நிமிடத்தில் மாற வாய்ப்புள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.