
நான் இப்போது நடித்துவரும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான கேரக்டர் கிடைத்திருக்கிறது. இந்தப் படம் என்னுடைய கேரியரில் முக்கியமானதாக இருக்கும் என அமலா பால் தெரிவித்துள்ளார்.
படம் தொடங்கி இதுவரை கப்சிப்பாக இருந்தவர் இப்போது உணர்ச்சிவசப்பட என்ன காரணம்?
முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தமிழில் வெளியாகும் அதே நாள் தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். அதற்கான வேலைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. அமலா பாலும் இப்போது தனது முதல் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். முப்பொழுதும் உன் கற்பனைகள் வெளிவந்தால் தமிழிலும் பெயர் கிடைக்கும், தெலுங்கிலும் பட எண்ணடிக்கையில் ஒன்று அதிகமாகும்.
இந்த கால்குலேஷன்தான் அமலா பாலை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. பால் பொழைச்சுக்குவார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.