மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 7ஆம் அறிவு ஆடியோ சென்னையில்.

சிங்கப்பூ‌ரில் ஆடியோ வெளியீடு என்றார்கள். பிறகு மலேசியா என்றார்கள். ஆனால் இசை வெளியீட்டு விழா என்னவோ நடக்கப் போவது சென்னையில்தான்.

7ஆம் அறிவு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை ட்ரேட் சென்ட‌ரில் வரும் 22ஆம் தேதி நடக்கிறது. சிங்கப்பூர், மலேசியா என்று முன்பு கூறிய காஸ்ட்லி கனவுகளை கலைத்துவிட்டு சென்னைக்கு யு டர்ன் அடித்திருக்கிறார்கள் தயா‌ரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும்.

ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடக்கயிருக்கின்றன. சன் தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.