ராஜபாட்டை, கரிகாலன் படங்களுக்குப் பிறகு விஜய் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இதுவொரு ஆக்சன் படம்.
சொந்தமாக யோசிப்பதைவிட சுடுவதில் அதிக திறமையானவர் விஜய். தெய்வத்திருமகள் போல் இதுவும் சுட்ட கதைதானாம். மாட் டாமன் நடிப்பில் மூன்று பாகங்களாக - பார்ன் ஐடென்டிட்டி, பார்ன் சூப்பர்மஸி, பார்ன் அல்டிமேட்டம் - வெளிவந்த பார்ன் சீரிஸின் முதல் பாகமான பார்ன் ஐடென்டிட்டியை இதற்காக தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் அனுஷ்கா, எமி ஜாக்சன் இருவரும் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.