பாங்காக் டேஞ்சரஸ் தாய்லாந்தில் உருவான படம். இரு தொழில்முறை கொலையாளிகளை பற்றிய கதை. ஹீரோவுக்கு காது கேட்காது. அதனால் பேசவும் வராது. அவனுக்கொரு நண்பன். இருவரும் இணைந்துதான் தங்களது தொழிலை நடத்தி வந்தனர். நண்பனுக்கு ஒரு காதலி. பாரில் ஸ்ட்ரிப்பராக வேலை பார்ப்பவள்.
ஹீரோ எதேச்சையாக மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் இளம் பெண்ணுடன் நட்பாகிறான். தனது புதிய நண்பன் ஒரு தொழில்முறை கொலையாளி என்பது தெரியாமலே அவளும் நட்புடன் பழகுகிறாள். ஒருகட்டத்தில் அவளுக்கு உண்மை தெரிகிறது. அவனை தவிர்க்க ஆரம்பிக்கிறாள்.
இதனிடையில் நண்பனின் காதலியை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்கிறான். நண்பன் அவனை கொன்று விடுகிறான். கொலை செய்யப்படுகிறவனின் ஆட்கள் நண்பனை கொல்கிறார்கள். ஒருபுறம் தோழியின் பாராமுகம். இன்னொருபுறம் நண்பனின் படுகொலை. ஹீரோ துப்பாக்கியுடன் புறப்படுகிறான். எதிரிகளுடன் நடக்கும் மோதலில் நண்பனின் காதலி கொல்லப்படுகிறாள். யுத்தம் தொடர்கிறது. வில்லனின் ஆட்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். வில்லன் ஹீரோவிடம் மாட்டிக் கொள்கிறான்.
சண்டை நடக்கும் இடத்தை போலீஸ் சுற்றி வளைக்கிறது. ஹீரோவின் இறுதி கடிதத்தைப் படிக்கும் தோழி அவன் மீதான ப்ரியத்தில் சண்டை நடக்கும் இடத்துக்கு வருகிறாள். ஹீரோ வில்லனுடன் வெளியே வருகிறான். இனி தப்பிக்க வழியில்லை. நண்பனின் இழப்பும், அவனது காதலியின் மரணமும் ஹீரோவுக்கு கடும் துயரை தருகின்றன. இதுவரை செய்த படுகொலைகள் ஒவ்வொன்றாக அவன் நினைவுக்கு வருகின்றன. பெரும் கழிவிரக்கத்துக்கு ஆட்படுகிறவன் தனது இடது நெற்றியில் துப்பாக்கியை வைத்து ட்ரிக்கரை அழுத்துகிறான். குண்டு நெற்றியை துளைத்து அவன் பிடித்து வைத்திருக்கும் வில்லனின் தலையையும் சிதறடிக்கிறது.
இந்தக் கதையின் இரண்டாவது பாராவை படிக்கும் போதே உங்களுக்கு விஷ்ணுவர்தன் இயக்கிய பட்டியல் நினைவுக்கு வந்திருக்கும். பாங்காக் டேஞ்சரஸ் படத்தைதான் விஷ்ணுவர்தன் பட்டியலாக்கியிருக்கிறார். கதை, கதாபாத்திரங்கள் எல்லாம் அப்படியே. ஹீரோவின் தோழி மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறாள். பட்டியலில் பூஜா வேலை பார்ப்பதும் ஒரு மருந்து கடையில்தான். பூஜாவுக்கு வீட்டில் ஒரேயொரு துணை அவளது பாட்டி மட்டுமே. இந்தப் படத்தில் ஹீரோயின் வீட்டிற்கு செல்லும் போது, கடவுளே ஒரு பாட்டி வந்து கதவை திறக்கக் கூடாது என்று பிரார்த்தித்தேன். விஷ்ணுவர்தன் ஏமாற்றிவிட்டார். பாட்டிதான் கதவை திறந்தார்.
ஹீரோயினின் வேலை, உறவு முதற்கொண்டு அனைத்தையும் அப்படியே அடித்திருக்கிறார்கள். என்றாலும் சென்டிமெண்ட் விஷயத்திலும், ஹீரோ மற்றும் அவனது நண்பன் கதாபாத்திரத்தை மெருகேற்றியதிலும் விஷ்ணுவர்தனை பாராட்டியே ஆக வேண்டும். இந்த விஷயத்தில் சர்வத்தைவிட பட்டியலில் அவர் சாதித்திருக்கிறார். சர்வம்... 21 கிராம்ஸ் படத்தின் தழுவல்.
நிற்க. பாங்காக் டேஞ்சரஸ் படத்துக்கு வருவோம். இந்தப் படத்தை இரட்டையர்களான Oxide Pang, Danny Pang 1999ல் இணைந்து உருவாக்கினர். இவர்கள் இணைந்து இயக்கிய முதல் படம் இது. 2008ல் நிக்கோலஸ் கேஜை வைத்து இதே பெயரில் ஒரு படத்தை இயக்கினார்கள். என்றாலும்,
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.