இந்திய மொழிகளில் தயாரான படங்களில் அதிக செலவு பிடித்தப் படம் என்ற பெயர் ஷாருக்கானின் ரா ஒன் திரைப்படத்துக்கு கிடைத்திருக்கிறது. சுமார் 170 கோடி பட்ஜெட் என்கின்றன செய்திகள்.
இவ்வளவு பெரிய தொகையை வசூலித்து அதற்கு மேல் லாபம் பார்க்க வேண்டும் என்றால் படத்தை இந்தியில் மட்டும் வெளியிட்டால் போதாது, தமிழ், தெலுங்கிலும் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ரா ஒன் இந்தியில் வெளியாகும் அதே நாள் தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
படத்தை பிரமோட் செய்ய தென்னிந்தியாவுக்கு வருகை தரும் எண்ணமும் ஷாருக்கானுக்கு உள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.