மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சூர்யா பையா ‌‌இந்தி ரீமேக்கில்?

7ஆம் அறிவு, மாற்றான் என்று பிஸியாக இருக்கிறார் சூர்யா. இந்தப் படங்களுக்கு அடுத்து ஹ‌ரி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த பிஸி ஷெட்யூல்களுக்கு நடுவில் பையா படத்தின் இந்தி ‌‌ரீமேக்கில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்றொரு தகவல் உலவுகிறது.

கார்த்தியை கலர்ஃபுல்லாக காட்டிய படம் பையா. படமும் பம்பர் ஹிட். இந்தப் படத்தை இந்தியில் ‌‌ரீமேக் செய்யவிருப்பதாகவும், சூர்யா நடிப்பதாகவும் செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

ரத்த ச‌ரித்திரம் மூலம் இந்திப் படவுலகிலும் ரசிகர்களை சூர்யா சம்பாதித்து வைத்துள்ளார். பையா ‌‌ரீமேக் அவ‌ரின் அடுத்தகட்ட பாய்ச்சலாக இருக்கட்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.