ஆர்வக் கோளாறில் ரசிகர்களும், தொண்டர்களும் செய்யும் அதிகப் பிரசங்கித்தனம் தலைவர்களுக்கு தலைவலியாவதுண்டு. ஜெயலலிதாவை அன்னை மேரியாக முன்பு சித்தரித்து போஸ்டர் ஒட்டியது பெரும் பிரச்சனையை கிளப்பியது. இப்போது இதே பிரச்சனையில் விஜய்யை மாட்டிவிட்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
மதுரையில் நடந்த வேலாயுதம் ஆடியோ வெளியீட்டு விழாவை முன்னிட்டு போஸ்டர் ஒட்டிய சில ரசிகர்கள் விஜய்யை கடவுளைப் போல் சித்தரித்திருந்தனர். இதனை வாரமிருமுறை அரசியல் இதழ் கட்டுரை வெளியிட்டு தாக்கியிருந்தது. விஷயம் பிரச்சனையின் திசையில் பாய்வதைக் கண்ட விஜய், நீண்ட விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டதுடன், இதுபோல் போஸ்டர் அடித்தால் அந்த ரசிகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.