அஜீத்தின் அடுத்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார் என்பது உறுதி. ஆனால் இயக்குனர் யார்? கதை என்ன?
ரத்னம் தயாரித்த சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று இந்தியன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ரத்னம் விரும்புகிறார். இந்தியன் பார்ட் 2 வில் அஜீத் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது அவரது விருப்பம்.
அதேபோல் தூக்குடு தெலுங்குப் படத்தின் ரிமேக் ரைட்ஸை வாங்கவும் ரத்னம் ஆர்வம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் அஜீத்துக்காகதானாம். இந்தியன், தூக்குடு இரண்டில் எதுவாக இருந்தாலும் அமர்க்களம்தான் என்பது ரசிகர்களின் நிலைப்பாடு. இந்த இனிய குழப்பத்தை ரத்னம் சீக்கிரம் முடித்து வைத்தால் நல்லது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.