''ஊருக்கு ஒரு உபதேசம், தனக்கு ஒரு உபதேசம் என்று நடிகர்கள் இருக்கக்கூடாது'' என்று உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்காத ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர், நடிகைகளை இந்து மக்கள் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ''உள்ளாட்சி என்பது இதயம் போன்றது. மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து பிரச்சனைகளை தீர்க்க கூடியது. இத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்வது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை'' என்று இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சாதாரண பிரஜைகளை விட பிரபலங்களாக இருப்பவர்கள் நிச்சயம் ஓட்டு போட்டு தங்களின் ஜனநாயக கடமைகளை ஆற்றுவது அவசியம் என்று கூறியுள்ள கண்ணன், திரையுலகில் இருக்கும் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, ஆர்யா, திரிஷா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் தேர்தலில் ஓட்டு போடாதது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
''திரைப்படங்களில் அரசியல்வாதிகள் தேர்தல் வாக்காளர்களின் கடமை போன்றவற்றை காட்சிப்படுத்துகின்றனர். ஓட்டு போடுவதன் அவசியத்தை வற்புறுத்துகின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளை போதிக்கின்றனர். நிஜ வாழ்க்கையிலும் நடிகர், நடிகைகள் அதுபோல் இருக்க வேண்டும். ஊருக்கு ஒரு உபதேசம், தனக்கு ஒரு உபதேசம் என்று இருக்கக்கூடாது என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்'' என்றும் கண்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நடிகர், நடிகைகள் தவறாமல் ஓட்டு அளிப்பது ரசிகர்களையும் ஜனநாயக கடமையாற்ற தூண்டுவதாக அமையும் என்றும் அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் கண்ணன் கூறியுள்ளார்.
வாக்களிக்காத நடிகர், நடிகைகள் மீது சாடும் இந்து மக்கள் அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அறிக்கை விட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.
'விஸ்வரூபம்' படத்துக்காக சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் கமல்ஹாசன் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 'பில்லா 2' படப்பிடிப்புக்காக கோவா சென்றுள்ளதால் அஜித்குமார் வாக்களிக்கவில்லையாகும்.
'மாற்றான்' படத்துக்காக ரஷ்யா சென்றுள்ளதால் சூர்யாவும், 'சகுனி' படத்துக்காக போலந்து சென்றுள்ளதால் கார்த்தியும் வாக்களிக்கவில்லை.
உடல் நலக் குறைவுக்காக சிகிச்சை மேற்கொண்டு தீவிர ஓய்வில் இருக்கும் ரஜினியின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஸ்டெல்லா மேரிஸ் பள்ளிக்கு வாக்களிக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட நாள்களுக்குப் பிறகு பொது இடத்துக்கு வந்தால் செய்தியாளர்களை சமாளிப்பது சிரமமாக இருக்கும் என்று கருதியதால் வாக்களிப்பதை தவிர்த்துவிட்டார் என ரஜினிகாந்த் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர், நடிகையர் பலர் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.