தீபாவளிக்கு 7ஆம் அறிவும், ரா.ஒன்னும் திரையரங்குகளை வளைத்துவிட்டதால் மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகியவை நவம்பரில் திரைக்கு வருகின்றன. வேலாயுதத்தின் முடிவு கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.
சுசீந்திரனின் ராஜபாட்டை கிறிஸ்மஸ் விடுமுறைக்கு திரைக்கு வருகிறது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் கிறிஸ்மஸ் விடுமுறையில் வெளியாவதில்லை. அதைவிட பொங்கல் நல்ல சாய்ஸ்.
இந்தமுறை லிங்குசாமியின் வேட்டையும் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாவதற்கான வாய்ப்பு உள்ளது. தயாரிப்பாளர் தரப்பில் அப்படியொரு எண்ணம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஷங்கரின் நண்பன் பொங்கலுக்கு வெளியாகும் என்றார்கள். கிறிஸ்மஸைத் தொடர்ந்து நியூ இயர், பொங்கல் என விடுமுறைகள் வருவதால் பொங்கலைவிட கிறிஸ்மஸுக்கு படத்தை வெளியிடலாமே என யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த கிறிஸ்மஸ் களைகட்டப் போகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.