
தபாங் படத்தின் வெற்றியால் அதன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளார் தபாங் படத்தின் தயாரிப்பாளரும், சல்மானின் சகோதரருமான அர்பாஸ் கான்.
இந்தப் படத்தில் தபாங்கில் வில்லனாக நடித்த சோனு சூட்டே வில்லனாக தொர்வார் என்று கூறியிருந்தனர். ஆனால் அது போரடிக்கும் என்பதால் பிரகாஷ்ராஜை வில்லனாக தேர்வு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே வான்டட், சிங்கம் படங்களில் பிரகாஷ்ராஜ் வில்லத்தனம் செய்து ரசிகர்களை மிரட்டியிருப்பது முக்கியமானது.
அப்படியானால் சோனு சூட்? படத்தில் அவருக்கும் முக்கிய ரோல் இருக்கிறது. ஆனால் மெயின் வில்லன் பிரகாஷ்ராஜ்தானாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.