ரா ஒன் படத்தில் ரஜினி நடிப்பார் என்று ஷாருக் கான் சொல்லி வந்ததை ரஜினி உண்மையாக்கியிருக்கிறார். ஆம், ரா ஒன்னில் ரஜினி ஒரு காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டரில் இப்படி ஷாருக் எழுதியுள்ளார்.
குழப்பம், மன அழுத்தத்தில் தவித்த நேரத்தில் ரஜினி சார் செட்டுக்குள் வந்தார். கடவுள் எதற்காக சினிமாவை படைத்தார் என்பதன் அர்த்தம் அப்போது புரிந்தது, நன்றி சௌந்தர்யா என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொரு ட்விட்டரில், ரா ஒன் முடிந்தது. ரஜினி சார் ஆசிர்வதித்துவிட்டார், அவரது பெருந்தன்மையை நினைக்கும் போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது, அவருக்காக எனது பிரார்த்தனைகள். அவரது குடும்பத்தினருக்கு எனது அன்பு. ரஜினி சார், எங்களை முழுமைப்படுத்திவிட்டீர்கள் என தெரிவித்துள்ளார் ஷாருக்கான்.
ரா ஒன்னில் நடித்ததன் மூலம் ராணா கைவிடப்படாது என்பதை ரஜினி உறுதி செய்திருக்கிறார். மேலும் ரா ஒன் படத்தின் தென்னிந்திய வசூல் அமோகமாக இருக்கும் என்பதையும் அறிவித்திருக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.