மயக்கம் என்ன படத்தில் நடித்திருக்கும் ரிச்சாதான் ஒஸ்தியிலும் ஹீரோயின். தமிழில் ஒரு ரவண்ட் வருவதற்குள் இவர் இந்திக்கு செல்வார் போலிருக்கிறது.
கந்தசாமி என்ற படு பயங்கர படம் எடுத்த சுசி.கணேசனுக்கு அடுத்து படம் எதுவும் அமையவில்லை. இதனால் இந்திப் பக்கம் சென்றவர் தனது திருட்டு பயலே படத்தை ரீமேக் செய்ய சில வருடங்களாக தலைகீழாக நின்று வருகிறார். வருடத்துக்கு ஒரு அடி இந்த புராஜெக்ட் நகர்வதாக கேள்வி.
இந்தப் படத்தில்தான் சோனியா அகர்வாலின் கதாபாத்திரத்தில் நடிக்க ரிச்சாவிடம் சுசி.கணேசன் கேட்டிருக்கிறார்.
கேட்டிருப்பது சுசி என்பதால் ரிச்சாவின் இந்திப் பயணம் இன்னும் சில வருடங்களுக்கு தள்ளிப் போகலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.