
சமீபத்தில் மும்பை சென்று அமிதாப் பச்சனை சந்தித்து ஆசி பெற்றார் தனுஷ். இந்தச் சந்திப்பு அமிதாப்பின் இல்லத்தில் நடந்தது. இதனை மிகக் கொண்டாட்டமாக அமிதாப்பும், அபிஷேக்கும் தங்களது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மிஷன் இம்பாஸிபிள் படத்தின் அறிமுக விழாவுக்கு தனுஷை அபிஷேக் பச்சன் அழைத்துச் சென்று தனுஷை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸும் கலந்து கொண்டார்.
தனுஷ், அபிஷேக் நெருக்கத்திற்கு ரஜினியின் மருமகன் தனுஷ் என்பது மட்டும் காரணமில்லை, தனுஷ் இந்தியில் இயக்கப் போகும் படத்தில் அபிஷேக் பச்சன்தான் நடிக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை இதுவரை அபிஷேக், தனுஷ் இருவரும் உறுதி செய்யவில்லை என்பது முக்கியமானது.