மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சர்வதேச திரைப்பட விழா சென்னையில்

கடந்த சில வருடங்களாக டிசம்பர் மாதத்தை முக்கியமான மாதமாக மாற்றியிருக்கிறது இ‌ண்டோ ஃபிலிம் அப்‌ரிசியேஷன் பவுண்டேஷன். கோவா, கேரளா சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இணையான சர்வதேச திரைப்பட விழாவினை இவர்கள் டிசம்பர் மாதம் ஒழுங்கு செய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையும், விழாவின் தரமும் உயர்ந்து வருவதை ஒரு பார்வையாளராக உங்களால் உணர முடியும்.

இந்த வருடம் இந்த திரைப்பட திருவிழா வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் ஒன்பது தினங்கள். அதாவது டிசம்பர் 22ஆம் தேதி வரை. மொத்தம் 44 நாடுகளைச் சேர்ந்த 154 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ப‌ரிசுப் பெற்ற திரைப்படங்களும் அடக்கம்.

ஃபிலிம் சேம்பர் திரையரங்கு, உட்லண்ட்ஸ், சத்யம், ஐநாக்ஸ் ஆகிய திரையரங்குகளில் இந்தத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும், திரைப்பட மேதைகளுடன் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தத் திரைப் படத்தையும் பா‌ர்ப்பதற்கு கட்டண பாஸ் வழங்கப்படும்.

இந்தியாவின் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான இதனை திரைப்பட ஆர்வலர்கள் தவறவிடக் கூடாது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.