
படத்துக்கு கால்ஷீட் வாங்கியதும் ஹீரோக்களின் தலைமுடியை தாறுமாறாக்குவது பாலாவுக்கு வேடிக்கையாகவே ஆகிவிட்டது. ஒன்று சட்டி மாதிரி தலைமுடியை மாற்றிவிடுவார். இல்லையென்றால் ப்ரவுன் பெயிண்ட் அடிப்பார். எப்படி என்றாலும் ஹீரோ வெளியில் தலைகாட்ட முடியாது. பாவம் அதர்வா.
பாலாவின் புதிய ஹீரோவான இவருக்கும் தலை ட்ரீட்மெண்ட் தொடங்கிவிட்டதாம். நேற்று தனது முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அதர்வா வந்திருந்தார். எப்படி? தலைமறைக்கும் அளவுக்கு தொப்பி வைத்து.
அதர்வாவுக்கு சட்டி தலையா இல்லை கோல்டன் கலரா? பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் வைக்கலாம்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்