மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வேகத்தடை வேட்டை மன்னனுக்கு.

ஒஸ்தி ஹிட்டு என்று அப்பாவும், புள்ளையும் வாயில் தவில் வாசித்தாலும் படம் பல‌ரின் வயிற்றை பதம் பார்த்திருக்கிறது. கலெக்சன் அப்படியொண்ணும் ஒஸ்தியில்லை என புறநகர் பகுதியில் நகம் கடிக்கிறார்கள்.

இந்த ‌ரிசல்ட் வேட்டை மன்னனை தயா‌ரித்து வரும் சக்ரவர்த்தியை உஷார்படுத்தியிருக்கிறது. இதுவரை படத்தின் செலவு பற்றி கேட்காதவர் சிம்புவிடமும், படத்தின் இயக்குன‌ரிடமும் எவ்வளவு செலவு, இனி எவ்வளவு செலவாகும் என கறார் கணக்கு கேட்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல. ஒஸ்தி ‌ரிலீஸின் போது திரையரங்கு உ‌ரிமையாளர்கள் கொடி பிடித்தது போல் வேட்டை மன்னனுக்கு நிகழாது எனறு உறுதி தந்தால் மட்டுமே அடுத்த ஷெட்யூல் என ஹெட்மாஸ்டர் லெவலுக்கு பிரம்பு எடுத்திருக்கிறார்.

வேட்டை மன்னனின் நகர்வலம் இதனால் தாமதப்படும் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.