மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஒஸ்தி முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. போராளி
சமுத்திரக்கனியின் போராளி, பெயரை வாங்கினாலும் கரன்ஸி விஷயத்தில் ரொம்ப சுமார். சசிகுமார் இருந்தும் சென்ற வார இறுதியில் 8 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.25 கோடி.

4. மயக்கம் என்ன
செல்வராகவன் பெயருக்கு இருக்கும் மயக்கம் காரணமாக இதுவரை சென்னையில் 3.98 கோடிகளை வசூலித்துள்ளது இப்படம். இதன் சென்ற வார இறுதி வசூல் 11.5 லட்சங்கள் மட்டுமே.

3. மௌனகுரு
சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 12 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. மம்பட்டியான்
இப்படமும் சென்ற வாரமே வெளியானது. எதிர்பா‌‌ர்த்ததைவிட அதிக வசூல் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் மூன்று தினங்களில் இப்படம் 26.5 லட்சங்களை வசூலித்துள்ளது.

1. ஒஸ்தி
தொடர்ந்து முதலிடத்தில் ஒஸ்தி. சிம்புவின் சுயபுராண தம்பட்டத்தைத் தாண்டி படத்துக்கு வசூல் சேர்வது ஆச்ச‌ரியம்தான். சென்ற வார இறுதியில் 45 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் 2.34 கோடிகளை கல்லா கட்டியிருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.