![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyIgGTroDuOQcuLdfyBi2mRuFDxZrV66aPOZ8MxK3ELFOQy_QKIw4dLc8HLZSUWC9NUYTxn6XFxK9jbQwFhpn2qMb9vaKAG2iLl0JQN1P2BL3KIyReijh8J46Y-AUarBtIqVhKQ3PBkho/s200/Dhanush%2527s+Decision+no+hot+movie+with+wife+soundarya+wal+mart.jpg)
உயிரைக் கொடுத்து பாட்டெழுதுகிறவர்களுக்கு கலைமாமணி கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. கொலவெறி என்று தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து மூக்கு சிந்தியதுபோல் பாட்டெழுதியதற்கு பிரதமரே அழைத்து விருந்து வைத்திருக்கிறார். விட்டால் பாரத ரத்னா கொடுத்தாலும் கொடுப்பார்கள். முல்லைப் பெரியாறுக்காக தொண்டை கிழிய கத்தினாலும் கேட்காத பிரதமருக்கு கொலைவெறி மட்டும் எப்படி கேட்டதோ?
சரி, மேட்டருக்கு வருவோம். இந்த வருடத்தின் மிஸ்டர் பாப்புலர் தனுஷ் இனி தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க மாட்டாராம். சொத்தையா படம் எடுத்தாலும் சம்பிரதாயத்துக்காக, இன்னும் ஒரு படம் இவர் இயக்கத்தில் நடிப்பேன் என்று சொல்வதுதான் தமிழ் சினிமா சம்பிரதாயம். தனுஷ் என்னடாவென்றால் மனைவி இயக்கத்தில் நடித்த படம் வெளிவரும் முன்பே, தடா அறிவித்திருக்கிறார். அவ்வளவு மொக்கையா என்று அவசர கற்பனை வேண்டாம்.
படம் எல்லாம் நன்றாகதான் இயக்குகிறதாம். ஆனால் படத்தைப் பற்றிய சர்ச்சை வீட்டிலும் தொடர்வதால் சண்டை வந்துவிடுகிறதாம். செல்லச் சண்டை என்றாலும் சண்டை சண்டைதானே. இனிமேல் மனைவி இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று சண்டைக்கு ஸ்டாப் போட்டிருக்கிறார்.
ஆளு ஒல்லி என்றாலும் அனுபவத்தில் மனுஷன் கில்லி.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.