தாராள குணத்துக்கு இனி நம்மூர் இயக்குனர்களைதான் உதாரணம் காட்ட வேண்டியிருக்கும். இவர்களின் தயாள குணம் பற்றி கேட்கும் போது விக்ரமன்பட கிளைமாக்ஸாக கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது.
உதவி இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் கிடைப்பது என்பது புதையல் கிடைப்பது மாதிரி. தயாரிப்பாளர் தேடி நாக்குத் தள்ளிப் போனவர்கள் ஆயிரம் பேர் என்றால், ரயிலேறி ஊர் சேர்ந்தவர்கள் நூறாயிரம் பேர். இந்தக் கஷ்டத்தைப் போக்க இயக்குனர்களே தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்கள்.
ஷங்கர் தனது உதவியாளர்கள் பாலாஜி சக்திவேல், சிம்புதேவன், அறிவழகன் போன்றோருக்கு வாய்ப்பளித்தார். ஷங்கர் பெரிய இயக்குனர், அதனால் இதனை சாதாரணமாக விடலாம். முருகதாஸ் முதல்முதலில் ஒரு படம் தயாரித்தார். எங்கேயும் எப்போதும். இயக்குனர் அவரது உதவியாளர் சரவணன். அடுத்தப் படமும் எனது உதவியாளனுக்கே என்று அறிவித்திருக்கிறார்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படங்களின் எண்ணிக்கை மற்றும் வாங்கிய சம்பளத்துக்கு தயாரிப்பாளர் என்ற ரிஸ்க்கை எடுக்க முடியாது. ஆனால் தனது உதவி இயக்குனருக்காக ஒரு தயாரிப்பாளரை கண்டுபிடித்துத் தந்துள்ளார். இவர்கள் வரிசையில் வெற்றிமாறனும் ஒரு படத்தை தயாரிக்கிறார். இயக்கப் போவது அவரது உதவி இயக்குனராம். கதைகூட வெற்றிமாறன்தான் எழுதித் தரப்போகிறாராம்.
இயக்குனர் என்பதற்கு அகராதியில் இளகிய மனம் என்று போடலாமா?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.