நடிகை அனன்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்கயிருக்கிறது. இதனை அவர் தெரிவித்துள்ளார்.
நாடோடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அனன்யா. அதன் பிறகு தமிழில் சிறிது காலம் நடிக்காமல் இருந்தவர், மலையாளப் படம் நந்தனத்தின் தமிழ் ரீமேக்கான சீடனில் நடித்தார். அவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான எங்கேயும் எப்போதும் கலெக்சனுடன் நல்ல படம் என்ற பெயரையும் பெற்றது.
அனன்யாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். தற்போது மாப்பிள்ளை கிடைத்திருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்பவர்தான் அனன்யாவை திருமணம் செய்யவிருக்கிறார். இந்தத் தகவலை அனன்யாவே மீடியாவிடம் தெரிவித்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.