மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நமிதாவை இப்படியா சட்டென்று கைவிடும் தமிழ் சினிமா?

நமிதாவின் மார்க்கெட் தமிழில் ஸ்டெடியாக இருந்த போதுதான், நடிக்கிறதுக்கு வாய்ப்புள்ள கேரக்டர் மட்டும்தான் செய்வேன் என்று தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டினார் நமிதா. விடுப்பு முடிந்து வந்துப் பார்த்தால் தமிழ் சினிமாவின் மெம‌ரியில் நமிதா இல்லை. எவ்வளவோ முயன்றுப் பார்த்தும் வாய்ப்பு பெயரவில்லை. பீப்பாய் மாதி‌ரி இருக்கும் நமிதாவால் உடம்பையும் குறைக்க முடியவில்லை.

தி டர்ட்டி பிக்ச‌ரில் வித்யாபாலனுக்குப் பதில் நான்தான் கரெக்டாக சூட் ஆகியிருப்பேன், பில்லா 2-வில் நானும் நடித்திருந்தால் நல்லது என்று போகாத ஊருக்கு டிக்கெட் கிடைக்கலையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கனவுக் கன்னியை இப்படியா சட்டென்று கைவிடும் தமிழ் சினிமா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.