மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ராஜபாட்டை முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. மம்பட்டியான்
பிரசாந்தின் மம்பட்டியான் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படம் இரண்டு வாரங்கள் முடிவில் சென்னையில் 80 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 1.6 லட்சங்கள்.

4. போராளி
சமுத்திரக்கனியின் ஃபார்முலா இந்தமுறை எடுபடவில்லை. போராளி நான்கு வாரங்கள் முடிவில் 1.39 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்றவார இறுதி வசூல் 1.9 லட்சங்கள்.

3. ஒஸ்தி
சென்னையில் ஒஸ்தி சென்ற வார இறுதியில் 6.29 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 3.28 கோடிகள்.

2. மௌனகுரு
பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தில் இருந்த மௌனகுரு இந்த வாரம் இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. சென்ற வார இறுதியில் இப்படம் 11.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 62 லட்சங்கள்.

1. ராஜபாட்டை
படத்தின் தரத்துடன் ஒப்பிடுகையில் ராஜபாட்டையின் சென்னை வசூல் மிகப்பிரமாதம் என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற வார இறுதியில் 40.5 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் 2.65 கோடிகளை வசூலித்துள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.