மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மோதிக் கொள்ளும் கோடம்பாக்கத்தினர்.

பெப்சி அமைப்பு தன்னிச்சையாக சம்பளத்தை நிர்ணயித்ததால் தயா‌ரிப்பாளர்கள் நேற்று அவசரக் கூட்டத்தை கூட்டி சில தீர்மானங்களை எடுத்தனர். இந்தத் தீர்மானத்தால் பெப்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது. எந்நேரத்திலும் போராட்டம் வெடிக்கக் கூடிய சூழல் நிலவுகிறது.

நேற்றைய கூட்டத்தில் தயா‌ரிப்பாளர்கள் சில தீர்மானங்களை நிறைவேற்றினர்.

பெப்சி தொழிலாளர் அமைப்பு தன்னிச்சையாக சம்பளத்தை உயர்த்தியது விதி மீறிய செயலாகும். இதனால் இனி பெப்சியுடன் தயா‌ரிப்பாளர்கள் சங்கத்துக்கு எவ்வித ஒப்பந்தமும் கிடையாது.

தயா‌ரிப்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்யலாம். அப்படி தொழில் செய்ய முன்வருகிறவர்களுக்கு தயா‌ரிப்பாளர்கள் சங்கம் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து அதை அனைத்து தயா‌ரிப்பாளர்களும் கடைபிடிக்க வலியுறுத்தும். மீறுகிறவர்களுக்கு தமிழக திரைப்பட தயா‌ரிப்பாளர்கள் சங்கம் எவ்வித ஒத்துழைப்பும் நல்காது.

இந்தத் தீர்மானம் பெப்சி தொழிலாளர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

பெப்சி யூனியனில் சில அமைப்புகளுக்கு கொடுக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பள விவரம்.
  • லைட்மேன் ரூ. 350 புதிய சம்பளம் ரூ. 530
  • ஜூனியர் ஆர்டிஸ்ட் ரூ. 250 புதிய சம்பளம் ரூ. 320
  • மகளிர் யூனியன் ரூ. 290 புதிய சம்பளம் ரூ. 400
  • செட் அசிஸ்டென்ட் ரூ. 350 புதிய சம்பளம் ரூ. 525
  • டிரைவர்ஸ் யூனியன் ரூ. 270 புதிய சம்பளம் ரூ. 415
  • காஷ்ட்யூம் அசிஸ்டென்ட் ரூ. 700 புதிய சம்பளம் ரூ. 850
  • புரொடக்ஷன் அசிஸ்டென்ட் ரூ. 350 புதிய சம்பளம் ரூ. 550
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.