எந்திரன், சிவாஜிக்குப் பிறகு நாங்கதான் என்று வேலாயுதமும், 7 ஆம் அறிவும் அடித்துக் கொண்டாலும் உண்மையில் இந்த வருடத்தின் மாஸ் கலெக்சன் மங்காத்தாதானாம்.
அஜீத்தின் இந்த கடத்தல் கதை சுமார் 130 கோடிகளை வசூலித்துள்ளது. வேலாயுதம், 7 ஆம் அறிவு படங்களைவிட குறைவான பட்ஜெட்டில் தயாரான படம் என்பதால் லாப சதவீதமும் அதிகம். அனைத்துத் தரப்பினரும் இந்தப் படத்தால் அதிக லாபம் சம்பாதித்துள்ளனர். இதற்கு ஒரேயொரு புள்ளிவிவரக் கணக்கே போதுமானது.
தென் தமிழகத்திலுள்ள ஒரு திரையரங்கு பத்து லட்சத்திற்கு மங்காத்தாவை வாங்கியது. இத்திரையரங்கின் முதல்நாள் கலெக்சன் மட்டும் எட்டரை லட்சங்கள். முப்பது நாட்கள் மங்காத்தா அந்தத் திரையரங்கில் ஓடியது. எனில் லாபத்தை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.