நண்பன் படத்தைத் தொடர்ந்து வேட்டை படத்துக்கும் தமிழக அரசு வரி விலக்கு அளித்துள்ளது.
தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பதை இந்த அரசு மாற்றியமைத்தது. யு சான்றிதழ் பெற வேண்டும், தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்க வேண்டும் என்றெல்லாம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிகளுக்கு உள்பட்டு வெளிவந்த நண்பனுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. நண்பன் படம் நன்றாக இருந்ததால் இதனை யாரும் விமர்சிக்கவில்லை.
தற்போது வேட்டை படத்துக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சுமாரான கமர்ஷியல் படம் வேட்டை. இந்தப் படத்துக்கும் வரி விலக்கா என்று கோடம்பாக்க ஏரியாவிலேயே குமுறி கொட்டுகிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.