
நடிக்க கூப்பிடுறாங்க, நானாதான் ஒதுங்கியிருக்கேன் என்று ஓவர் பில்டப் கொடுத்த வடிவேலுவின் வனவாசம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. எல்லாம் சிம்புதேவனின் கரிசனம்.
இவர் தனுஷை வைத்து இயக்கும் சரித்திரப் படத்தில் புலிகேசி நாயகனும் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்பியிருக்கிறார். தயாரிப்பாளர், ஹீரோ என எல்லா தரப்பும் இதற்கு ஓகே சொல்ல சந்தோஷமாக வடிவேலுக்கு போனடித்தாராம். புயல் என்ன மறுக்கவா செய்யப் போகிறது? உடனே ஓகே சொல்லியிருக்கிறார். அதுவும் சம்பளம் பற்றி எதுவும் பேசாமல்.
மகிழ்ச்சியில் அவ்வ்வ் என்று அழுதிருப்பாரோ.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.