மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நேற்று வேட்டை ப்‌ரிமியர் ஷோ.

வேட்டை படத்தின் ஸ்பெஷல் காட்சி படத்தின் இயக்குனர் மற்றும் படத்தில் நடித்தவர்களுக்கு ஸ்பெஷலாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

வேட்டை படம் ஹிட்டாகும் என்பதில் படத்தின் இயக்குனர் லிங்குசாமிக்கும் அதில் நடித்த ஆர்யா, மாதவனுக்கும் சந்தேகமில்லை. சூப்பர்ஹிட்டா, சூப்பர் டூப்பர் ஹிட்டா என்பதில்தான் சந்தேகம். நேற்று படத்தைப் பிரசாத் லேப் திரையரங்கில் பார்த்த பிறகு இவர்களின் தன்னம்பிக்கை கூடியிருக்கிறது.

இன்று படத்தில் பணியாற்றியவர்கள் தங்கள் குடும்பத்துடன் வேட்டையை கண்டு ரசிக்கயிருக்கிறார்கள். எனது குடும்பத்தினருடன் இந்தப் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என்று தெ‌ரிவித்திருக்கிறார் படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான அமலா பால்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.