எப்படி என்று யாருக்கும் தெரியாமல் ஹிட்டான பாடல்தான் கொலவெறி. இந்த அசட்டு வெற்றியை வைத்து 3 படத்துக்கு விலை பேசுகிறவர்களை என்னவென்று சொல்ல?
படம் எப்படி? கதை என்ன? எதுவும் தெரியாது. இருந்தாலும் பிரதமரையே விருந்துக்கு அழைக்க வைத்த பாட்டு இடம்பெறும் படமாயிற்றே என்று 3 படத்துக்கு கண்டபடி விலை வைக்கிறார்கள் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும். இதில் சில சானல்களும் போட்டியில் இடம் பிடித்துள்ளன.
போகிற போக்கைப் பார்த்தால் இந்தப் படத்துக்கு தொண்ணூறு கோடி வரை விலை வைப்பார்கள் போலிருக்கு என்றார் அந்த பிரபல இரண்டெழுத்து சேனலைச் சேர்ந்த பெரும்புள்ளி. எதுக்கு இப்படி ஒன்றுமில்லாத விஷயத்தை ஏற்றிவிடுகிறார்களோ?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.