ஐஸ்வர்யாவின் 3 படத்தைப் பற்றிய சில மூடுபனி விவகாரங்களை அவரே தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
பிப்ரவரியில் வெளியாவதாகச் சொல்லப்பட்ட படம் தள்ளிப் போகிறது. பெரிய நடிகர்களின் படங்களை முக்கியமான நாட்களில் மட்டும் வெளியிட வேண்டும் என்று தயாரிப்ப்ப்பாளர்கள் சங்கம் கூறியிருப்பதால்தான் பிப்ரவரியில் 3 வெளியாகவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம்.
3 படம் தமிழில் வெற்றி பெற்றதில் தெலுங்கில் டப் செய்து வெளியிடலாம் என்று நினைத்தார்களாம். கொலவெறி பாடல் 3 யை சர்வதேசப் படமாக்கியதால் தமிழில் படம் வெளியாகும் அதே நேரம் தெலுங்கிலும் படத்தை வெளியிடலாம் என்று டப்பிங் வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள். அதனால்தான் படம் வெளியாவது தாமதமாகிறது.
இரண்டாவது, 3 படத்தை தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி இந்தியிலும் வெளியிடப் போகிறார்கள். இதற்காக நல்ல இந்தி மொழிபெயர்ப்பாளர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்றாவது மிக முக்கியமானது. தனுஷ் இந்தியில் அபிஷேக்பச்சனை இயக்குகிறார் என்றதெல்லாம் சும்மாவாம். விரைவில் இந்திப் படமொன்றில் தனுஷ் நடிக்கப் போகிறார் என்பதே உண்மையாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.