நயன்தாரா காதல் நாடகம் கலவர எபிசோடுக்கு திரும்பியிருக்கிறது. பிரபுதேவாவும், சிம்புவும் நயன்தாராவுக்கு கல்தா கொடுத்ததுடன் கல்லாவிலும் கை வைத்தார்கள் என்று காட்டமாக புகார் எழுப்பியிருக்கிறது நயன்தாராவின் குடும்பம்.
சிம்பு - நயன், நயன் - பிரபுதேவா காதலும் மோதலும் அனைவருக்கும் மனப்பாடம் என்பதால் அடுத்த அத்தியாயத்துக்கு வருவோம். நயன்தாராவை மேலே உள்ள இருவரும் திட்டமிட்டு ஏமாற்றியதாக நயன்தாராவின் குடும்பத்தார் சொல்லத் தொடங்கியுள்ளனர். சிம்புவும், பிரபுதேவாவும் நயன்தாராவிடமுள்ள பணத்தை எடுத்துக் கொண்டு அவரை அம்போவென விட்டுவிட்டதாக அவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
பிரபுதேவா தனது முன்னாள் மனைவி ரமலத்துக்கு தந்த ஜீவனாம்ச பணம் யாருடையது என்பது அவரவருக்குத் தெரியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று சொன்னதாலேயே பிரபுதேவா அவரை விட்டுப் பிரிந்ததாகவும் நயன்தாராவின் குடும்பத்தினர் நம்புகின்றனர்.
இந்த புகாருக்கு இதுவரை மாஸ்டர் பதிலளிக்காமல் வழக்கமான மவுனத்துடன் இருக்கிறார். சிம்புவிடமிருந்து இல்லாவிட்டாலும் டிஆரிடமிருந்து விரைவில் எதுகை மோனையில் ஒரு எக்ஸ்பிரஸ் மறுப்பு வரக்கூடும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.