பார்த்திபன் மலையாளத்தில் ஓரிரு படங்களில் பட்டையை கிளப்பியிருக்கிறார். சும்மா சொல்லவில்லை... சேட்டன்களே சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள். தெலுங்கில் அந்தப்புரம் என்றொரு படம் நடித்தார். துண்டு கேரக்டர்தான், ஆந்திராவையே துண்டாடிவிட்டார். இப்போது மேலுமொன்று.
ராம் சரண் தேஜா, தமன்னா நடிக்கும் படமொன்றில் தேஜாவின் அப்பாவாக - அப்படீன்னா தமன்னாவுக்கு மாமனார்தானே? - நடிக்கிறாராம் பார்த்திபன். அப்பா கேரக்டர் என்றாலும் அப்பாடக்கர் கேரக்டர் இல்லை. அடித்து தூள் கிளப்ப வேண்டிய வேஷம். மனுஷன் வெளுத்து வாங்கியிருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார்.
பார்த்திபனை பொறுத்தவரை சோலோ என்றால்தான் சோதனை. சைடு ரோல் என்றால் தைரியமா தியேட்டருக்குப் போகலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.