5. ஒரு நடிகையின் வாக்குமூலம்
எவ்வளவுதான் எண்ணைய் தேயத்துப் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்று சும்மாவா சொன்னார்கள். கதை கேட்டு அழுதேன், நடிப்பைப் பார்த்து அசந்தேன் என்று கலர் கலராக கதைவிட்டாலும் ரசிகர்கள் படு உஷார். ஒரு நடிகையின் வாக்குமூலம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் ஒரு லட்சம்கூட வசூலிக்கவில்லை. 77.2 ஆயிரங்களில் முடங்கிவிட்டது.
4. வேட்டை
இது இன்னொரு விளக்கெண்ணைய் உதாரணம். படத்தைப் பார்த்து ஹாலிவுட்டிலேயே கேட்டாக என்றெல்லாம் பில்டப் செய்யப்பட்ட படம் சென்னையில் நான்கு வாரங்கள் முடிவில் 3.42 கோடிகள்தான் வசூலித்திருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 4.7 லட்சங்கள் மட்டுமே.
3. நண்பன்
நான்கு வாரங்களில் மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது நண்பன். இதன் சென்ற வார இறுதி வசூல் 9.6 லட்சங்கள். இதுவரை 7.71 கோடிகளை வசூலித்துள்ளது. இது தெய்வத்திருமகள், 7 ஆம் அறிவு வசூலைவிட குறைவு.
2. தோனி
முதல் மூன்று வாரங்களில் பிரகாஷ்ராஜின் இந்தப் படம் 23.3 லட்சங்களை வசூலித்துள்ளது. இவரின் இனிது இனிது படத்தைவிட இது அதிகம். விமர்சனங்கள் பாஸிடிவ்வாக இருப்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
1.மெரினா
பாண்டிராஜின் படம் தொடர்ந்து அதே முதலிடத்தில் உள்ளது. இப்படம் சென்ற வார இறுதியில் 25 லட்சங்களை வசூலித்துள்ளது. பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 1.32 கோடி.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.