மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விரைவில் Billa is Back.

ஏற்கனவே ‌ரிலீஸான படங்களை மீண்டும் விளம்பரம் செய்து வெளியிடுவதுதான் இம்மாதத்தின் கோடம்பாக்க பேஷன். வெங்காயத்தைத் தொடர்ந்து ஆரண்யகாண்டத்தை வெளியிடுகிறார்கள். இதில் ஆரண்யகாண்டத்தைப் பார்க்க ஒரு பெ‌ரிய ரசிக பட்டாளம் காத்திருக்கிறது. மற்றப் படங்கள்..?

கொடுமை என்னவென்றால் பெ‌ரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிட்ட முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தையும் மீண்டும் ‌ரிலீஸ் செய்யப் போகிறாராம் இயக்குனர். ஒன்றரை மாசத்தில் ஒரு படத்துக்கு இரண்டு ‌ரிலீஸா? காமெடிதான்.

நாம் சொல்ல வந்தது பில்லா விஷயம். மே 1 அ‌‌ஜீத்தின் பிறந்த நாளன்று பில்லா 2-வை வெளியிடுவது சாத்தியமில்லை என்பது உறுதியானதால் ஏற்கனவே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌ஜீத் நடித்து ஹிட்டான பில்லாவை மீண்டும் வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம். ரசிகர்கள் ஒட்டுமொத்த ஆர்வத்துடன் இருப்பதால் பில்லா தயா‌ரிப்பாளர்களும் உற்சாகமாக இருக்கிறார்கள். விரைவில் பில்லா இஸ் பேக் விளம்பரம் வரலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.