மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 7 ஆம் அறிவில் கோட்டைவிட்டதை துப்பாக்கியில் ச‌ரி செய்வாரா சந்தோஷ் சிவன்?

ஊரெல்லாம் ஸ்டிரைக்கில் இருக்கையில் விஜய்யின் துப்பாக்கி ஷூட்டிங் மட்டும் எப்படி நடக்கிறது என்று கேயார் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதில் சொல்லப்படவில்லை. சென்ற வாரம் துப்பாக்கியின் பாடல் ஒன்றை எந்தத் தடையும் இன்றி படமாக்கினார்கள்.

விஜய் பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு நடனக் கலைஞர் ஷோபி நடனம் அமைத்திருந்தார். பாடலுக்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சந்தோஷ்சிவன் விஜய் நடிக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது இதுவே முதல்முறை. இது குறித்து மகிழ்ச்சியை இணையத்தில் பகிர்ந்து கொண்டிருப்பவர், படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் உண்மையான லொகேஷனில் படமாக்கியிருப்பதாக‌த் தெ‌ரிவித்துள்ளார்.

விஜய் மும்பையில் நல உதவி வழங்கிய விழாவில் ரசிகர்கள் முண்டியடித்து தடியடி ப‌ரிசாக பெற்றார்கள். அப்படியிருக்க விஜய்யை வைத்து மும்பையின் முக்கிய பகுதிகளில் எப்படி படப்பிடிப்பு நடத்தினார்கள்?

ஷூட்டிங்கிற்கான எந்த பாதுகா‌ப்பு‌ம் இல்லாமல் கேமராவை மறைத்து வைத்து காட்சிகளை தத்ரூபமாக படமாக்கியதாக சந்தோஷ்சிவன் தெ‌ரிவித்துள்ளார். முருகதாஸ் 7 ஆம் அறிவில் கோட்டைவிட்டதை துப்பாக்கியில் ச‌ரி செய்வார் என்பதே அனைவ‌ரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.