Wednesday, March 7, 2012

> கோச்சடையானுக்குப் பிறகு கோ இயக்குனர்தான் ர‌ஜினியை இயக்குவார் ?

கோச்சடையான் இன்னும் தொடங்கவில்லை. அதாவது படப்பிடிப்பு. அதற்குள் தனது அடுத்தப் படம் குறித்து ஆழமாக ப்ளான் பண்ண ஆரம்பித்துவிட்டார் ர‌ஜினி என மர்மமாக புன்னகைக்கிறது கோடம்பாக்கம். என்ன நடந்தது?

சினிமாவின் இப்போதைய நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் ர‌ஜினி தன்னை இயக்குவதற்கு தகுதியான இயக்குனரையும் அப்படியே எடைபோட்டு வருகிறார். அவரது தராசில் இப்போதைக்கு இடம் பிடித்திருப்பவர் கே.வி.ஆனந்த்.

அயன், கோ என்று அடுத்தடுத்து ஹிட் அடித்த கே.வி.ஆனந்த் மாற்றான் படத்தையும் சூப்பர்ஹிட் ஆக்குவார் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. கமர்ஷியலான கதையை விம‌ரிசையாக ப‌ரிமாறும் ஆனந்தின் ஸ்டைல் சூப்பர் ஸ்டாருக்கு பிடித்திருக்கிறது. தனக்கு ஒரு கதை பண்ணும்படி அவர் ஆனந்திடம் கூறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

ஆக, கோச்சடையானுக்குப் பிறகு கோ இயக்குனர்தான் ர‌ஜினியை இயக்குவார் என‌த் தெ‌ரிகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.