மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஸ்ரோயாவை கடுப்பாக்கிய தயாரிப்பாளர்.

ஸ்ரேயாவுக்கும் சேர நாட்டுக்கும் செட்டாவதேயில்லை. எப்படி டியூன் செய்தாலும் ஒரே கர்ர்ர்... புர்ர்ர்... சத்தம்தான்.

மோகன்லால் ஜோடியாக ஸ்ரேயா காஸனோவா என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் இதுதான் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். ஆறு மாதத்தில் முடிய வேண்டிய படம் பல வருடங்கள் ஜவ்வாக இழுத்து ஒருவழியாக வெளியாகி, இந்த வருடத்தின் மொக்கைப் படங்களில் ஒன்று என பெயர் வாங்கியது.

இதற்கு முன்னால் இன்னொரு சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் போக்கி‌ரிராஜா என்ற படத்தில் நடித்தார். இதில் மம்முட்டியின் தம்பி பிருத்விரா‌ஜின் காதலியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. சூப்பர் மொக்கையான இந்தப் படத்தை ராஜா போக்கி‌ரி ராஜா என்ற பெய‌ரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். இதுதான் பிரச்சனை.

போக்கி‌ரிராஜாவில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது தயா‌ரிப்பாளருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டாராம் ஸ்ரேயா. அதாவது போக்கி‌ரிராஜாவை வேறு மொழிகளில் டப் செய்யக் கூடாது என்பதுதான் அது. அதை மீறி தயா‌ரிப்பாளர் இப்போது படத்தை தமிழில் வெளியிடுகிறார். இதனால் சூடாகிப் போன ஸ்ரேயா நடிகர் சங்கத்தில் இது குறித்து புகார் தெ‌ரிவித்துள்ளார்.

ச‌ரி, போக்கி‌ரிராஜாவை தமிழில் வெளியிட்டால் என்னவாகிடப் போகிறது? ஸ்ரேயா ஏன் இதற்கு பதற்றப்பட வேண்டும்? ஓவர் கவர்ச்சியில் நடித்திருக்கிறாரா?

அதெல்லாம் இல்லை. மம்முட்டி, பிருத்விரா‌ஜ் பில்டப்புகளுக்கு நடுவில் ஸ்ரேயாவின் வேடம் சின்ன பிட்டாக சுருங்கிவிட்டது. இதனால்தான் தனி ஹீரோயினாக நடிக்கும் தமிழில் இப்படம் வரக்கூடாது என்கிறார் ஸ்ரேயா. படமோ, வேஷமோ... பிட் என்றாலே பிரச்சனைதான்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.