மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பருத்திவீரன் சோதனையில் சவாலில் சாதிப்பாரா அமீர் ?

எனக்கு நியாயமான ராயல்டி தராமல் பருத்திவீரன் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார்கள் என்று தயா‌ரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஜெமினி லேப் ஆகியோர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார் அல்லவா இயக்குனர் அமீர்? அதை கடுகளவு மதித்ததாக தெ‌ரியவில்லை ஞானவேல்ராஜா. தெலுங்கு டப்பிங்கை அறிவித்த அதே தேதியில் கொண்டு வரும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, பருத்திவீரன் படத்தை தெலுங்கில் மட்டுமின்றி கன்னடத்தில் வெளியிடவும் இவர் முயன்று வருவதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. இதெல்லாம் புகார் கொடுத்த அமீருக்கான பகிரங்க சவால்கள்.

ச‌ரி, என்ன தைரியத்தில் இப்படி செய்கிறார் ஞானவேல்ராஜா?

அங்குதான் ஆட்டவிதி அட்டகாசமாக விளையாடுகிறது. ஒரு படத்தை பிற மொழியில் ‌ரீமேக் செய்தால் கதாசி‌ரியருக்கும், இயக்குனருக்கும் ராயல்டி தர வேண்டும். அதுவே டப்பிங் செய்தால் அத்தனையும் தயா‌ரிப்பாளருக்குதானாம். பருத்திவீரன் தெலுங்கில் டப் தானே செய்யப்படுகிறது. அதுதான் இந்த சவால் சவடால் எல்லாம். என்ன செய்யப் போகிறார் அமீர்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.