5. கொண்டான் கொடுத்தான்
இந்தப் புதிய படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 2.7 லட்சங்களை வசூலித்துள்ளது. புதுமுகங்களின் சில படங்கள் ஆயிரங்களில் முடங்கும் போது இப்படம் லட்சத்தை எட்டிப் பிடித்தது சாதனைதான்.
4. அம்புலி
3டி படமான இது விமர்சனத்தின் பலத்தால் இரண்டு வாரங்கள் கடந்தும் தாக்குப் பிடிக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.02 லட்சங்கள். இதுவரை 34 லட்சங்களை வசூல் செய்துள்ளது.
3. முப்பொழுதும் உன் கற்பனைகள்
இந்த சைக்கோ படம் சடசடவென சரிந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 11 லட்சங்கள். இதுவரை 1.42 கோடியை இப்படம் வசூலித்துள்ளது.
2. காதலில் சொதப்புவது எப்படி
மோசமான படங்களாக வரும் போது சுமாரான படங்களுக்கு கொண்டாட்டம்தான். அதி அற்புதப் படம் என்ற பாராட்டு கிடைக்கும், வசூலும். காதலில் சொதப்புவது எப்படி சென்ற வார இறுதியில் 25.6 லட்சங்களை வசூலித்திருக்கிறது. இதுவரை இதன் சென்னை வசூல் 2.25 கோடி.
1. அரவான்
ஆதி, பசுபதி என்று ஓபனிங் இல்லாத ஹீரோக்கள். ஆனால் படத்தை இயக்கியது வசந்தபாலன் என்பதால் 59 லட்சங்களை முதல் மூன்று தினங்களில் அரவான் அறுவடை செய்திருக்கிறது. ஆனால் படம் கடுமையான சோதனைக்கு ஆட்படுத்துவதால் வசூலும் படுத்துவிடும் என்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.