ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு, கமல் ஹீரோ, படத்தின் பெயர் தலைவன் இருக்கின்றான், இயக்கம் ஷங்கர்... சென்ற மாதம் சூறாவளியாக வீசிய இந்திச் செய்தியை இன்று காணவே காணோம். ஷங்கர் அடுத்து யாரை இயக்குகிறார் என்ற கேள்வி மட்டும் அப்படியே இருக்கிறது.
கடந்த இரு தினங்களாக புதிய செய்தியொன்று அடிபடுகிறது. இருதரப்பும் அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லவில்லை என்றாலும் அது என்ன செய்தி என்று தெரிவிப்பது நமது கடமை.
அதாவது ஷங்கர் தனது புதிய ஸ்கிரிப்டை தொடங்கிவிட்டார். முன்பு சுஜாதாவிடம் கதை சொல்லி எழுதி வாங்கியது போல் இந்தமுறை கே.வி.ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் சுபாவிடம் கதை சொல்லி காட்சிகளை விரிவாக எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார்.
இந்தமுறை கமல், விக்ரம் எல்லாம் ஷங்கரின் மனதில் இல்லை, சூர்யாவுடன் இணைய அவர் முடிவு செய்திருக்கிறார் என ஒரு இனிப்புருண்டையை உருட்டிவிட்டிருக்கிறார்கள். இதைத்தான் இப்போது மீடியா மொய்த்துக் கொண்டிருக்கிறது.
ஷங்கரோ, சூர்யாவோ இதனை ஒத்துக் கொண்டால் மட்டுமே அது இனிப்புருண்டையா இல்லை கசப்புருண்டையா என்பது தெரியவரும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.