பெப்சி பிரச்சனையில் சில சங்கங்களிடையேதான் உடன்பாடானது. லைட்மேன் உள்பட பல சங்கங்கள் இன்னும் பிடிவாதத்தை தளர்தவில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் அவரவர் திறமைக்கு ஏற்ப உள்ளூரிலும், வெளியூரிலும் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். ஆரம்பம் முதலே இசைக்கலைஞர்கள் சங்கம் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. வழக்கம்போல் அவர்கள் பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் நேற்று மீனம்பாக்கம் அருகில் நடந்த அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் சிலர் கலாட்டா செய்தனர். பெப்சி சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட அவர்கள், பெப்சிக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்படும் வரை படப்பிடிப்பை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர். கலாட்டா காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இந்த கலாட்டா குறித்து கருத்து தெரிவித்த ஞானவேல்ராஜா, பருத்திவீரன் பிரச்சனையை மனதில் வைத்து அமீர்தான் பெப்சியைச் சேர்ந்தவர்களை தூண்டிவிட்டு கலாட்டா செய்துள்ளார் என குற்றம்சாற்றினார். ஆனால் இதனை அமீர் மறுத்திருக்கிறார்.
சிலரின் படப்பிடிப்பு மட்டும் தங்குதடையில்லாமல் நடக்க, கார்த்தி படப்பிடிப்பில் மட்டும் ஏன் கலாட்டா? யோசிக்க வேண்டிய விஷயம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.