ஒரு படத்தில் நடித்ததும் அவர்களிடம் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி கேட்கும் நிருபர்களுக்கு ஆயுள் தண்டனை என்று புதிய சட்டம் இயற்றினால் நாட்டில் பாதி குழப்பங்கள் தீரும். இதுவரை ஒரு பொதுக்கூட்டத்தில்கூட மேடையேறாத உதயநிதியிடம், அரசியலில் குதிப்பீர்களா என்ற ஆபத்தான கேள்வி கேட்கப்பட்டது. அதற்குமுன் அவரின் படத்தைப் பற்றி.
ஒரு கல் ஒரு கண்ணாடியை பிரமோட் செய்ய அவசியமில்லை. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு திரையரங்குக்கு வருகிறார்கள். இந்நிலையில் கோயம்புத்தூர் தென்காசி என்று டூர் கிளம்பியது ஓகே ஓகே டீம். வையாபுரி வந்தாலே அடித்துப் பிடிக்கும் ரசிகர்கள் தளபதியின் மகனை கண்டதும் தறிகெட்டதில் ஆச்சரியமில்லை. இதைப் பார்த்ததும் 2051-ல் முதல்வராகும் ஆசை உதயநிதிக்கு வந்ததா தெரியவில்லை. அரசியலில் குதிப்பீர்களா என்ற அசட்டுக் கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார்.
ஐந்து வருடங்களுக்கு முன் நடிப்பீர்களா என்று கேட்டிருந்தால் தெரியாது என்றிருப்பேன். அதுபோல் ஐந்து வருடம் கழித்து அரசியலில் குதிப்பேனா என்பது தெரியாது. காலம்தான் அதனை முடிவு செய்யும் என்றார். கையை உயர்த்தி வானத்தை காட்டியிருந்தால் அப்படியே ரஜினிதான். அரசியல் என்று வரும் போது இனி உதயநிதியின் இம்சையையும் நாம் தாங்க வேண்டி வரும்.
ஒரு காமெடிப் படத்தில் அரைகுறையாக நடித்ததற்கே அரசியல் என்றால்... யார்யா அந்தக் கேள்வியை கேட்டது?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.