மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பட்டையை கிளப்பும் தி அவென்ஜர்ஸ் பாக்ஸ் ஆபிஸ் சாதனை

ஆறு சூப்பர் ஹீரோக்கள் இணைந்திருக்கும் தி அவென்ஜர்ஸ் வசூலில் சக்கைப்போடு போடும் என்பது தெ‌ரிந்ததுதான். ஆனால் சாதனைப் படைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வீக் எண்ட் எனப்படும் வெற்றி, சனி, ஞாயிறு நாட்களில் இதுவரை அதிக வசூல் செய்தப் படமாக ஹா‌ரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் இரண்டாகம் பாகம் படம் முதல் மூன்று தினங்களில் 169.2 மில்லியன் டாலர்களை யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்தது. இதுதான் அதிகபட்சமாக இருந்தது. இரண்டாவது இடம் நோலனின் தி டார்க் நைட். இப்படம் 158.4 மில்லியன் டாலர்களை வசூலித்திருந்தது. இதையெல்லாம் தி அவென்ஜர்ஸ் ஒன்றுமில்லாமல் செய்துள்ளது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 200.3 மில்லியன் டாலர்கள்.

இந்த பிரமாண்ட வசூல் மேலும் அதிக‌ரிக்கும் என்பதால் தயா‌ரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பார்ட் 2, 3 என்று பட்டையை கிளப்பும் ஐடியாவும் இருக்கிறதாம்.

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.