மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா

சுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெருமளவில் உதவியிருக்கிறது.

காமெடி படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதை ஓகே ஓகே உறுதி செய்திருக்கிறது. அதிலும் சந்தானம் இருந்தால் போட்ட பணத்தை எடுத்திடலாம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. கலகலப்பு காமெடியை பிரதானமாக வைத்து சுந்தர் சி. எடுத்திருக்கும் படம். இவரது வின்னர்தான் இன்று வரை வடிவேலுவின் மாஸ்டர் பீஸ். கலகலப்பு‌வில் சந்தானம் பிரதான ரோலில் வருகிறார். இது போதாதா?

படம் 11ஆம் தேதிதான் வெளியாகிறது. அதற்குள் மினிமம் கியாரண்டி அடிப்படையில் அனைத்து ஏ‌ரியாக்களையும் விற்றிருக்கிறார்கள். படம் வெளியாகும் முன்பே தயா‌ரிப்பாளருக்கு கை நிறைய லாபம்.

சந்தானத்துடன் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.