கோச்சடையான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் எடுக்கிறார்களா ஸ்பாட் விசிட் அடிக்கிறார்களா என்று தெரியாத அளவுக்கு நாலு நாலு நாட்களாக உலகின் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். ரஜினியின் உற்சாகம் மற்ற நட்சத்திரங்களையும் தொற்றிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.
ரஜினி எனும் மிகப்பெரிய பிராண்டட் நடிக்கும் படம் என்பதால் பிசினஸ் எல்லைகள் தாறுமாறாக விரிந்திருக்கிறது. ஜப்பானில் வெளியிடுவோம், சீனாவில் திரையிடுவோம் என்று எங்கெங்கு நோக்கிலும் கோச்சடையான். இந்தப் படத்தை அண்டை மாநிலம் ஆந்திராவில் விக்ரம சிம்கா என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். தமிழில் வெளியாகும் அதேநாள்.
போகிறப் போக்கைப் பார்த்தால் எந்திரனை எல்லாம் எகிறி அடிக்கும் போலிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.