இந்தியன் சினிமா என்றால் அது இந்தி சினிமா. அப்படியானால் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்கு சினிமாக்கள்? அது சௌத் இந்தியன் சினிமா. ஓ... சௌத் இந்தியா இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா என்று கேட்டால் யாருக்கும் பதில் தெரியாது.
ஐஃபா என்ற குறை மூளைக்காரர்கள் இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அவார்ட்ஸ் என்று இந்தி சினிமாவுக்கு மட்டும் விருது அளிக்கிறார்கள். இதனால் மற்ற மொழிக்காரர்கள் சௌத் இந்தியன் என்ற பெயரில்தான் எதையும் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தியன் சினிமா அவார்ட்ஸ் என்று பெயர் வைத்து தென்னிந்திய மொழிப் படங்களுக்கு மட்டும் விருது வழங்கும் கெத்து நம்மாட்களுக்கு இல்லை.
விஷயத்துக்கு வருவோம். சௌத் இந்தியன் இண்டர்நேஷனல் மூவி அவார்ட்ஸ் என்ற பெயரில் விருதுகள் வழங்கயிருக்கிறார்களாம். இந்த வருடம் முதல் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஐஃபா-வின் ஜெராக்ஸாக இந்த விருது வழங்கல் இருக்கும் என தெரிகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.