
போக்கிரி படத்தை வான்டட் என்று இந்தியில் எடுத்து அங்குள்ள ஹீரோக்களின் தேடலுக்குரிய இயக்குனர் ஆனார் பிரபுதேவா. வான்டட் நூறு கோடியை தாண்டி வசூல் செய்தது. இப்போது சிறுத்தையை ரவுடி ரத்தோர் என்ற பெயரில் எடுத்து வருகிறார். அக்சய் ஹீரோ. இப்போதே எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.
விரைவில் சல்மான்கான் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார். அதேநேரம் அஜய்தேவ்கானை வைத்து ஒரு படம் பண்ணவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சொந்தமாக வூடு கட்டி பெயிண்ட் அடித்து பெட்டு டேபிளும் வாங்கி குடியேறும் வகையில்லை பிரபுதேவா. கட்டிய வீட்டிற்குள் கப்பென்று படுத்துக் கொள்ளும் சத்யராஜ் ரகம். ஏற்கனவே வெற்றி பெற்ற போக்கிரி, சிறுத்தையை ரீமேக் செய்தது போல் தமிழின் எவர்கிரீன் பாட்ஷாவை அஜய்தேவ்கானை வைத்து எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.
இப்போதுதான் பாட்ஷாவை டிஜிட்டலுக்கு மாற்றி இந்தியில் வெளியிடும் வேலையை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் பாட்ஷாவை ரீமேக் செய்ய படபடக்கிறார் மாஸ்டர். யார் பாஸ் பண்ணப் போகிறது... பார்ப்போம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.