சென்ற ஆட்சியில் தமிழில் பெயர் வைத்தாலே முழு வரிவிலக்கு கிடைத்தது. இந்த ஆட்சியில் சில விதிமுறைகள் புகுத்தப்பட்டன.
தமிழில் பெயர் இருக்க வேண்டும், யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், கலாச்சாரத்தை கட்டிக் காப்பதாக கதை இருக்க வேண்டும்...
இந்த புதிய விதியின் அடிப்படையில் 3 படத்துக்குக்கூட வரிவிலக்கு அளித்தார்கள். ஆனால் ஸ்டாலின் மகன் என்பதால் உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு வரிச் சலுகை அளிக்கவில்லை. வழக்கு எண் படம் அனைவராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. ஆபாசம் இல்லை, அடிதடியில்லை, சமூகத்துக்கு தேவையான கருத்துகள்... என்றாலும் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தந்ததால் வரிச் சலுகை கிடைக்கவில்லை.
யு சான்றிதழுக்கும், யு/ஏ சான்றிதழுக்கு இடையில் நடைமுறையில் ஆறு என்ன ஒரு வித்தியாசம்கூட இல்லை. 18 வயதுக்குட்பட்டோர் பெற்றோர் துணையுடன் படத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அப்படியா நடக்கிறது. சொத்தையான ஒரு விதியைக் காட்டி சத்தான ஒரு படத்திற்கு வரிச் சலுகை மறுப்பது சரியா?
இன்னொரு முக்கிய விஷயம், வரிச்சலுகையால் படம் பார்ப்பவர்களுக்கு துளி பிரயோஜனில்லை. விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், தயாரிப்பாளர் என இந்த முக்கூட்டணிதான் சலுகையை அனுபவிக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.